அன்னையின் கலைத்தமிழ் அரங்கம் – 2026
10.9.2026 அன்று கும்பகோணத்தில் உள்ள அன்னை இன்ஜினியரிங் கல்லூரியில், அன்னையின் கலைத்தமிழ் அரங்கம்- 2026 என்ற தலைப்பில் பல்வேறு கலைப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. இப்போட்டிகளில் 80க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டன. இப்பெரு விழாவில் எமது ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசுஉதவிபெறும் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்று, பரதநாட்டியம், தப்பாட்டம், கிராமிய நடனம், செவ்வியல் இசை போன்ற பல்வேறு கலை பிரிவுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் ( Overall Championship ) என்ற பட்டத்தை வென்று அதற்கு பரிசுத்தொகையாக ரூபாய் 15,000யும் கேடயமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் எம் பள்ளி தலைமை ஆசிரியர் பாராட்டினார்.