போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வில் மாவட்ட முதலிடம்
2025-26ஆம் கல்வியாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றத்தின் மூலம் சிறப்பாகச் செயல்பட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், எமது ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாவட்டத்திலேயே முதலிடத்தைப் பெற்று ரூபாய் 15,000 பரிசுத் தொகையை வென்றது.
மேலும் இச்சிறப்பிற்கான பாராட்டுச் சான்றிதழை எம் பள்ளித் தலைமையாசிரியர் அவர்கள், இன்று (11.8.2026) மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலைக்கல்லூரியில் நடைபெற்ற “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு நிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் பொற்கரங்களால் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தார்.