போதைப்பொருளுக்கு எதிராக மாணவிகளின் விழிப்புணர்வு

இன்று ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி வளாகத்திலிருந்து 100 மீட்டர் மற்றும் 500 மீட்டர் தொலைவுகளில் சாலையில் சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறக் கோடுகள் வரையப்பட்டு, “போதைப்பொருள் தடை செய்யப்பட்ட பகுதி” என்ற விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்டது.

மேலும், மாணவிகள் பொதுமக்களுக்குப் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்த பள்ளித் தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள்.


போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகள்
போதைப்பொருள் தடை செய்யப்பட்ட பகுதி விழிப்புணர்வு
சாலையில் விழிப்புணர்வு வண்ணக் கோடுகள் வரையும் மாணவிகள்
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடவடிக்கை
மாணவிகளின் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரம்
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்குதல்
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கும் மாணவிகள்
போதைப்பொருள் எதிர்ப்பு மன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி