Flagday celebration with our Thiruvarur District collector
✍️✍️ இந்தியாவில் முப்படை வீரர்களின் 💂♀️💂🏻 அரும் பணிகள் மற்றும் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் 🎊டிசம்பர் 7ஆம் தேதி 🪄படைவீரர் கொடி நாளாக🪄 அறிவிக்கப்பட்டு நாம் கடைபிடித்து வருகின்றோம். இந்நாளில் திரட்டப்படும் நிதியானது, 👮♂️👮♂️முப்படை வீரர்களின் குடும்பத்தினர்களுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் 👩✈️👩✈️ நல்லனுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருவாரூரில் நடந்த படைவீரர் கொடிநாள் விழாவிற்கு மாண்புமிகு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திரு. மோகனசுந்தரம் அவர்கள் தலைமை வகித்தார். இவ்விழாவில் எம் 🏤ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியைச்சார்ந்த என்சிசி (NCC) மாணவிகள் மற்றும் பொறுப்பாசிரியர் S.சங்கீதா அவர்கள் கலந்து கொண்டனர். இன்று (8.12.25) காலை பள்ளி வழிபாட்டு கூட்டத்தில் 🇮🇳 கொடிநாள் பற்றிய விழிப்புணர்வு மாணவர்களிடையே ஏற்படுத்தப்பட்டது.
🇮🇳🇮🇳🇳🇪🇮🇳🇮🇳