கேரம் & இறகுப்பந்து போட்டிகளில் ஸ்ரீ ஜி.ஆர்.எம் மாணவிகள் அசத்தல்

6.8.2026 அன்று வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் திருவாரூர் குறுவட்ட அளவிலான கேரம் மற்றும் இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பாகப் பங்கேற்று வெற்றிகளைக் குவித்துள்ளனர்.

கேரம் போட்டியில் 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட இரட்டையர் பிரிவுகள் மூன்றிலும் முதலிடமும், இறகுப்பந்து போட்டியில் 14 மற்றும் 19 வயதிற்குட்பட்ட இரட்டையர் பிரிவுகளில் முதலிடமும், 17 வயதிற்குட்பட்ட இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடமும், 19 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் இரண்டாம் இடமும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

முதலிடம் பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மனமாரப் பாராட்டி, மாவட்ட அளவிலான போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


கேரம் மற்றும் இறகுப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள்