மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 விழிப்புணர்வு
இன்று (23.07.2026) எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 தொடர்பான சுய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காலை பள்ளி வழிபாட்டு கூட்டத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் எம் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் திருமதி தீபா அவர்கள் மாணவிகளுக்கு சுய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம் மற்றும் அதில் பொதுமக்கள் எவ்வாறு பங்கேற்க வேண்டும் என்பது குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.
மேலும், அரசு குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியான se.census.gov.in பள்ளியின் அனைத்து WhatsApp குழுக்களிலும் பகிரப்பட உள்ளது எனவும், எவ்வாறு குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் தனித்துவமான SE ID பற்றியும், பின்னர் கணக்கெடுப்பாளர் வருகையின் போது SE ID-யை வழங்கி கணக்கெடுப்பை விரைவாக நிறைவு செய்வது குறித்தும் எளிமையாக எடுத்துக்கூறினர்.
மேலும், சுய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான கால அவகாசம் ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை என்றும், அனைவரும் தங்களது விவரங்களை துல்லியமாகவும் பொறுப்புடனும் பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.