முதலமைச்சர் கோப்பை – மாவட்ட விளையாட்டு சாதனை 2026
10.9.2026 அன்று திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், திருவாரூர் மாவட்ட அளவிளான முதலமைச்சர் கோப்பைக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசுஉதவி பெறும் மேல்நிலைப்பள்ளி சார்ந்த மாணவிகள் கலந்து கொண்டு, Basket Ball போட்டியில் மூன்றாம் இடமும் (12*1000=12000), Hand Ball போட்டியில் மூன்றாம் இடமும் (14*1000=14000), Volleyball போட்டியில் மூன்றாமிடமும் (12*1000=12000), Shuttle Badminton singles போட்டியில் இரண்டாமிடமும் (1*2000=2000), Shuttle Badminton doubles போட்டியில் முதலிடமும் (2*3000=6000), Badminton Doubles போட்டியில் இரண்டாம் இடமும் (2*2000=4000) பெற்று, எம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு தலா 3000மும், இரண்டாம் இடம் பெற்ற மாணவிகளுக்கு தலா 2000-மும், மூன்றாமிடம் பெற்ற மாணவிகளுக்கு தலா 1000மும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவிகளை எம் பள்ளி தலைமை ஆசிரியர் பாராட்டி சிறப்பித்தார்.