இன்றைய தினமணி நாளிதழில்
31.7.2026 அன்று திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், திருவாரூர் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பாகப் பங்கேற்று வெற்றிகளைக் குவித்துள்ளனர்.
14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் 23 முதலிடங்களும், 18 இரண்டாம் இடங்களும், 11 மூன்றாம் இடங்களும் பெற்று, மொத்தமாக 180 புள்ளிகளைப் பெற்று எம் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றவர்கள் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மனமாரப் பாராட்டி, மாவட்ட அளவிலான போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார்.