மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் 2026–27

2.9.2026 அன்று வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் திருவாரூர் மாவட்ட அளவிளான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் நம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசுஉதவி பெறும் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவிகள் கலந்து கொண்டு, சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். கேரம் போட்டியில் 14 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் முதலிடமும், ஷட்டில் பேட்மிட்டன் போட்டியில் 14,17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவில் முதலிடமும், 19 வயதுக்குட்பட்ட ஒற்றைப் பிரிவில் முதலிடமும் பெற்று, மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்று எம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை எம் பள்ளி தலைமை ஆசிரியர் பாராட்டினார்.


மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் 2026–27