கல்வி வளர்ச்சி நாள்

கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

அதனையொட்டி இன்று எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக பெருந்தலைவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காமராஜர் அவர்களின் கல்விப் பணிகளையும், சாதனைகளையும் நினைவுகூரும் வகையில் மாணவி உரை, கவிதை மற்றும் குழுப்பாடல் நடைபெற்றது. காமராஜர் அவர்களின் எளிமை, நேர்மை, கல்வி வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகள் மற்றும் அவரின் தொலைநோக்கு பார்வையால் உருவான ஆழியாறு அணை பற்றியும் எம் பள்ளி தலைமை ஆசிரியர் நினைவுகூர்ந்தார்.

இவ்விழாவையொட்டி நடைபெற்ற பள்ளி அளவிலான பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, இவ்விழா இனிதே நிறைவுற்றது.


கல்வி வளர்ச்சி நாள்