இந்தியன் ஃப்ளோர் பால் பெடரேஷன்

இந்தியன் ஃப்ளோர் பால் (Floor Ball) பெடரேஷன் சார்பில் 2026–2027ஆம் ஆண்டிற்கான சவுத் சோன் ஃப்ளோர் பால் சாம்பியன்ஷிப் போட்டி, 14 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு 26.06.2026 முதல் 28.06.2026 வரை சேலம் வைகை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த டி. நேத்ரா மற்றும் டி. சிவஸ்ரீ ஆகிய மாணவிகள் கலந்து கொண்டனர்.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் பங்கேற்ற இப்போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்று தமிழ்நாட்டிற்கும், திருவாரூர் மாவட்டத்திற்கும், எம் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

எம் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் 30.06.2026 அன்று காலை பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் அம்மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.


இந்தியன் ஃப்ளோர் பால் பெடரேஷன்