Free Bicycle Distribution

இன்று 8.1.2026 வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் எம் பள்ளி வளாகத்தில் 11ஆம் வகுப்பு மாணவிகளுக்கான அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. அவ்விழாவில் 464 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. விழாவில் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர், மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் (DRO) வருவாய் கோட்டாட்சியர்(RDO) நகராட்சி தலைவர் (Chairman) நகராட்சி துணைத் தலைவர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் (DEO) ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு மிதிவண்டியோடு வாழ்த்துக்களையும் வழங்கி சிறப்பித்தனர்.