கைப்பந்து போட்டியில் மூன்று பிரிவுகளிலும் முதலிடம்

17.8.2026 அன்று திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், திருவாரூர் குறுவட்ட அளவிலான கைப்பந்து (Handball) விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பாகப் பங்கேற்று வெற்றிகளைக் குவித்துள்ளனர்.

இப்போட்டியில் 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். முதலிடம் பெற்ற மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவிகளைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மனமாரப் பாராட்டி, மாவட்ட அளவிலான போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


கைப்பந்து போட்டியில் மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற மாணவிகள்