12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல்
18.8.2026 அன்று எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில், விஜயபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கான உயர்கல்வி ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக பேராசிரியர் Rtn. Prof. Dr. N. செழியன் ராஜாங்கம் (SQP Academy, Thanjavur) அவர்கள் கலந்துகொண்டு, மாணவிகளுக்கு உயர்கல்வி தொடர்பான பல்வேறு வாய்ப்புகள், பொறியியல், கணினி அறிவியல் உள்ளிட்ட உயர்கல்வித் துறைகள், நுழைவுத் தேர்வுகள் மற்றும் அவற்றிற்குத் தயாராகும் முறைகள் குறித்து விளக்கினார்.
மேலும், எதிர்கால வேலைவாய்ப்புகள், நீதிபதி உள்ளிட்ட சட்டத்துறைப் பணிகள், அரசுப் பணிகள் மற்றும் போட்டித் தேர்வுகள் குறித்தும் மாணவிகளுக்குப் பயனுள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.