இளந்தமிழ் விருது வழங்கும் விழா

திருவாரூர் தமிழ்ச்சங்கம் சார்பில் 2025–26ஆம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கான இளந்தமிழ் விருது வழங்கும் விழா 30.06.2026 அன்று ஹோட்டல் செல்வீஸில் நடைபெற்றது.

இதில் எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த, தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்ற 20 மாணவிகளுக்கு (10ஆம் வகுப்பு – 6 மாணவிகள், 12ஆம் வகுப்பு – 14 மாணவிகள்) விருதுகள் வழங்கப்பட்டன.

இன்று (01.07.2026) காலை எம் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் அம்மாணவிகளுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.


இளந்தமிழ் விருது வழங்கும் விழா