ஜூனியர் ரெட் கிராஸ்

28.7.2026 அன்று எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசுஉதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் (Junior Red Cross ) துவக்க விழா நடைபெற்றது. காலை தலைமை ஆசிரியரின் கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில் செஞ்சிலுவை சங்கத்தின் நிறுவனர் ஹென்றி டொனேண்ட் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. மனிதநேயம், சேவை மனப்பான்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை மாணவிகளிடையே வளர்க்கும் நோக்கில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சத்துணவுத் திட்டத்தில் பயிலும் மாணவிகளுக்கு பருப்பு வகைகள், கீரை வகைகள், தானியங்கள், பிஸ்கட் பாக்கெட்கள், காய்கறி மற்றும் பழங்கள் உள்ளிட்ட சத்தான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகளுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கினர்.


ஜூனியர் ரெட் கிராஸ்