இலக்கிய மன்ற தொடக்க விழா
08.07.2026 அன்று எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 2026–27ஆம் கல்வி ஆண்டிற்கான இலக்கிய மன்ற தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு திருவாரூர் நகைச்சுவை இமயம், தமிழ் செம்மல் விருதாளர் புலவர் திரு. சண்முகவடிவேல் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.
இவ்விழாவில் "தமிழ் வளர்ச்சியில் நவீன பெண்கள்" என்ற தலைப்பில் அவர் ஆற்றிய சிறப்புரை மாணவிகளை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும் வகையிலும், தமிழ் மொழியின் பெருமை மற்றும் வாழ்க்கை நெறிகள் குறித்து ஊக்கமூட்டும் வகையிலும் அமைந்தது.
மேலும், இந்நிகழ்வில் 2025–26ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவிகளின் உருவப்படங்கள் திறந்து வைக்கப்பட்டு, அவர்களின் கல்விச் சாதனை சிறப்பிக்கப்பட்டது.