மாணவிகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு

ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில், கடந்த இரண்டு வாரங்களாக கொடிக்கால்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கலந்துகொண்டு, மாணவிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமின் இறுதி நாளான இன்று (20.8.2026) காலை பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் மருத்துவர்கள் கலந்துகொண்டு, பெண் குழந்தைகள் மாதவிடாய் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறைகள், தனிப்பட்ட தூய்மை, ஊட்டச்சத்து, மாதவிடாய் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (Cervical Cancer) தடுப்பூசியின் (HPV) அவசியம் குறித்து பயனுள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

எம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பள்ளித் தலைமையாசிரியர் அவர்கள், கொடிக்கால்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.


மாணவிகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி