மொஹரம் பண்டிகை

ஜூன் 26 ஆம் தேதி மொஹரம் பண்டிகையை முன்னிட்டு எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர், செயலர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மொஹரம் பண்டிகையின் வரலாறு, அதன் முக்கியத்துவம், தியாகம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் போன்ற உயரிய பண்புகள் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டு, குழுப்பாடல் மற்றும் திருக்குர்ஆன் ஓதுதலோடு இவ்விழாவானது இனிதே நிறைவு பெற்றது.


மொஹரம் பண்டிகை