குழு விளையாட்டுகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் 2026
திருவாரூர் மாவட்ட அளவிலான குழு போட்டிகள் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியால் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசுஉதவிபெறும் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக மொத்தம் 25 அணிகள் கலந்து கொண்டதில் 16 அணிகள் முதலிடமும், ஏழு அணிகள் இரண்டாம் இடமும், இரண்டு அணிகள் மூன்றாம் இடமும் பெற்று சிறப்பான சாதனையை படைத்தனர். இதன் மூலம் குழு போட்டிகளில் எம் பள்ளி மொத்தம் 208 புள்ளிகளும், குழு மற்றும் தடகள போட்டிகளில் 222 புள்ளிகளும் பெற்று திருவாரூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்( Overall Championship) பட்டமானது எமது பள்ளிக்கு வழங்கப்பட்டது. இச்சாதனை மாணவிகளின் சிறப்பான பங்கேற்பு, விடாமுயற்சி, விளையாட்டு திறமை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மூலம் நிகழ்த்தப்பட்டது என கூறி தலைமை ஆசிரியர் அவர்களை பாராட்டினார்.