சாலை விபத்துக்களை தடுக்கவும், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசால் ஜனவரி 11 முதல் 17 வரை 🪄 சாலை பாதுகாப்பு வாரமாக(National Road Safety Week) 🪄 அனுசரிக்கப்படுகிறது.
அதனையொட்டி இன்று 20.1.26 எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சாலை விதிகளை மதித்தல், ஹெல்மெட் அணிதல், பொறுமையாக வாகனம் ஓட்டுதல் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.