அறிவியல் மன்ற துவக்க விழா
28.7.2026 அன்று எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசுஉதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மன்ற துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவிகள் அறிவியல் சார்ந்த கவிதைகளை வாசித்தனர். மேலும் அறிவியல் தொடர்பான கேள்வி-பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அறிவியல் பாடல்கள் மற்றும் அறிவியல் துணுக்குகள் மூலம் புதிய தகவல்கள் பகிரப்பட்டன. அறிவியல் மன்றங்களின் நோக்கங்கள் , அறிவியலில் அன்றாட பயன்பாடுகளும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு இவ்விழா இனிதே நிறைவுற்றது.