சாரணியர் இயக்கத் தொடக்க விழா

29.7.2026 அன்று எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசுஉதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் சாரணியர் இயக்கத் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. குடியேற்றத்துடன் துவங்கிய விழாவின் தொடக்கமாக, சாரணியர் இயக்கத்தின் நிறுவனரான பேடன் பவுல் அவர்களின் திருஉருவப்படத்திற்கு தலைமை ஆசிரியர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சாரணியர் இயக்கத்தின் நோக்கம், ஒழுக்கம், தலைமைத்துவ பண்புகள் மற்றும் சமூக சேவையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சத்துணவு உண்ணும் மாணவிகளின் உடல்நலத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு பருப்பு வகைகள் , பல்வேறு தானியங்கள் ,கீரை வகைகள் , பழங்கள் காய்கறிகள் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட சத்தான பொருள்கள் வழங்கப்பட்டது. மேலும் பொருளாதார வசதி குறைவாக உள்ள மாணவர்களின் கல்வி மற்றும் அன்றாட தேவைகளுக்கு உதவும் வகையில் நிதிஉதவி தொகையும் வழங்கப்பட்டது. மாணவர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது.


சாரணியர் இயக்கத் தொடக்க விழா