சிலம்பாட்ட கழகம்
மயிலாடுதுறை வீரபாண்டிய சிலம்பாட்ட கழகம் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நலன் கருதி, 28.06.2026 அன்று மயிலாடுதுறை ஏ.ஆர்.சி. விஸ்வநாதன் கல்லூரியில் 40 நிமிடங்கள் இடைவிடாது சிலம்பம் சுற்றும் சாகச நிகழ்வு நடைபெற்றது.
இதில் எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பாக சிலம்பம் சுற்றியதற்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
அச்சான்றிதழ்களையும் பதக்கங்களையும் எம் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் 29.06.2026 அன்று காலை பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் அம்மாணவிகளுக்கு வழங்கி பாராட்டினார்.