விளையாட்டில் சாதித்த மாணவிகளுக்கு பாராட்டு
கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் திருவாரூரின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற திருவாரூர் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், 17.8.2026 அன்று காலை நடைபெற்ற பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில், பள்ளித் தலைமை ஆசிரியர் மாணவிகளுக்குச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினார்.