தமிழ்நாடு நாள்
தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.
இதனை முன்னிட்டு தமிழ்வளர்ச்சித் துறை சார்பில், இன்று 14.07.2026 அன்று கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருவாரூர் மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி எம்.இ. சுபிக்ஷா சிறப்பாகப் பங்கேற்று, திருவாரூர் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இச்சிறப்பான வெற்றியைப் பெற்ற அம்மாணவியை எம் பள்ளி தலைமை ஆசிரியர் பாராட்டி சிறப்பித்தார்.