திருவாரூர் குறுவட்ட குழு விளையாட்டுப் போட்டிகள்

21.07.2026 அன்று திருவாரூர் குறுவட்ட அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி, பேரளத்தில் நடைபெற்றது.

இதில் எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவிகள் கோ-கோ, எறிபந்து (Throw Ball) மற்றும் பூப்பந்து (Ball Badminton) ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

கோ-கோ போட்டியில் 14 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடமும், எறிபந்து போட்டியில் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடமும், பூப்பந்து போட்டியில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடமும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 2-ம் இடமும் பெற்று எம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். அம்மாணவிகளை எம் பள்ளி தலைமை ஆசிரியர் பாராட்டினார்.


திருவாரூர் குறுவட்ட குழு விளையாட்டுப் போட்டிகள்